கோவா மாநாட்டில் பங்கேற்பதற்காக பாக். வெளியுறவு அமைச்சர் பிலாவல் இந்தியா வருகை

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2019ம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத பயிற்சி முகாமை இந்தியாவின் போர் விமானங்கள் தாக்கின. இதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த மாதம் கோவாவில் 4 மற்றும் 5 தேதிகளில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு இந்தியா வருகின்றது. இதனை பாகிஸ்தான் வெளியுறவு துறை உறுதிபடுத்தியுள்ளது.

The post கோவா மாநாட்டில் பங்கேற்பதற்காக பாக். வெளியுறவு அமைச்சர் பிலாவல் இந்தியா வருகை appeared first on Dinakaran.

Related Stories: