ராகுல் காந்திக்கு சிறை தண்டனை காங்கிரசார் போராட்டம்

செங்கல்பட்டு: ராகுல் காந்தியை எம்பி பதவி தகுதி நீக்கம் செய்து சிறை தண்டனை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல்காந்தி எம்பி பதவி பறிக்கபட்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல், ரயில் மறியல் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். நகர தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

இதில், அக்கட்சியினர் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வரை‌ ஊர்வலமாக வந்த செங்கல்பட்டு பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் இந்தியன் வங்கி எதிரில் கண்டன ஆர்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்தும், ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதித்தது, அவரது எம்பி பதவி பறிப்பைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

The post ராகுல் காந்திக்கு சிறை தண்டனை காங்கிரசார் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: