திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சிறுசேமிப்பு திட்டத்தின் மூலம் மாணவர்கள் ரூ. 2.50 லட்சம் சேமித்து சாதனை படைத்தனர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சிறுசேமிப்பு திட்டத்தின் மூலம் மாணவர்கள் ரூ. 2.50 லட்சம் சேமித்து சாதனை புரிந்துள்ளனர். அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இவர்கள் ஆண்டு முழுவதும் சிறுசேமிப்பு திட்டம் மூலம் வருவதுடன் சேமித்த ரூ. 2.50 லட்சம் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து வந்த தலைமை ஆசிரியர் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பணத்தை பிரித்து மாணவர், மாணவிகளிடம் வழங்கினார்.

ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இரு தினங்களில் தேர்வு முடிவு அடைந்து பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்படவுள்ளது. இந்நிலையில் சிறு சேமிப்பில் அதிக அளவில் பணம் சேமித்த ஒவ்வொரு வகுப்பிலுள்ள மாணவர்களுக்கும் முதலாவது மற்றும் இரண்டாவது பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்ததால் மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளியில் இடையப்படி, அம்மையநாயக்கனூர், நக்கம்ப்படி, கிழக்கு தோட்டம், இந்திரா நகர் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏழைஎளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சேமிப்பை ஊக்குவித்த பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

The post திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சிறுசேமிப்பு திட்டத்தின் மூலம் மாணவர்கள் ரூ. 2.50 லட்சம் சேமித்து சாதனை படைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: