ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒரு வாலிபர் கைதுதிருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த

திருவண்ணாமலை, ஏப்.19: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக, ஹரியானாவைச் சேர்ந்த ேமலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த பிப்ரவரி 12ம் தேதி இரவு அடுத்தடுத்து 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், கர்நாடகம், ஹரியானா, அசாம் மாநிலங்களைச் சேர்ந்த 7 முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து லாரி, கார் மற்றும் ₹5 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஏடிஎம் கொள்ளையை எப்படி திட்டமிட்டு நடத்தினார்கள் என்ற தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ஹரியானா மாநிலம், நோபால் பின்வான் பகுதியைச் சேர்ந்த முபாரக்கான் மகன் தஸ்லீம்கான்(32) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு, இவர் உதவி செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலைக்கு அழைத்துவரப்பட்ட தஸ்லீம்கான், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

The post ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒரு வாலிபர் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த appeared first on Dinakaran.

Related Stories: