தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை

பல்லடம்,ஏப்.18: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அவரது பிறந்த நாளையொட்டி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் மாவட்ட கவுன்சிலர் கரைப்பதூர் கொங்கு ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் கொங்கு நாகராஜன், மாவட்ட பொருளாளர் சுப்ரமணியம், பொங்கலூர் ஒன்றிய அவைத் தலைவர் தேவராஜ், ஒன்றிய செயலாளர் செல்வராஜ் பூபதி, மாவட்ட மாணவரணி செயலாளர் சிவக்குமார், ஒருங்கிணைந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணவேணி, நகர மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: