விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதியில் அரசு பள்ளிகளில் முதல் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு இணையாக முன்னதாக துவங்கியது

விராலிமலை, ஏப்.18: அரசு பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை தொடங்கியது. வரும் கல்வி ஆண்டுக்கு அரசுப் பள்ளிகளில் நேற்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. பெற்றோர்கள் ஆர்வமுடன் தொடக்கப்பள்ளிக்கு மாணவருடன் வந்திருந்து சேர்க்கை படிவத்தில் தங்கள் பிள்ளையின் பெயரை பதிவிட்டனர். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக்கோரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை திமுக தலைமையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்து வருகிறது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், விராலிமலை அரசுப் தொடக்கபள்ளியில் மாணவர் சேர்க்கை நேற்று முதல் தொடங்கியது. இதில் பெற்றோர்கள் ஆர்வமுடன் தொடக்கப்பள்ளிக்கு மாணவருடன் வந்திருந்து சேர்க்கை படிவத்தில் தங்கள் பிள்ளையின் பெயரை பதிவிட்டு சென்றனர். விழாவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி புதுக்கோட்டை மாவட்ட திட்ட அலுவலர் தஙகமணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளஞ்செழியன், பள்ளி தலைமை ஆசிரியர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுவாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது ஜூன் மாதத்தில்தான் நடைபெறும். இந்த ஆண்டு முதல் முறையாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் ஏப்ரல் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதியில் அரசு பள்ளிகளில் முதல் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு இணையாக முன்னதாக துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: