ஜம்மு – காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில் கார்கில் மாவட்டத்திற்குட்ட பட்ட ஜொஜிலா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஏராளமான வாகனங்கள் சிக்கி கொண்டன. கார்கில் மாவட்டம் மினி மார்க் பகுதியில் நேற்று திடீரென பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த வழியாக லென் நோக்கி சென்ற 5 லாரிகள் அடுத்தடுத்து சாலையில் இருந்து கீழே உருண்டு விழுந்து பனிக்கட்டியில் புதைந்தன.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் வாகனத்தில் இருந்து 6 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலையும் அதே பகுதி வழியாக சென்ற 2 லாரிகள் பனிச்சரிவில் கீழே விழுந்து உருண்டு விழுந்தன. அந்த வாகனத்தில் இருந்த ஓட்டுநர்கள் உள்ளிட்ட 3 பேரை ராணுவத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஜொஜிலா பகுதியில் அடுத்தடுத்து பனிச்சரிவு நிலவி வருவதால் சாலைகளை விரிவுபடுத்த மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன் பேரில் சாலையை விரிவுபடுத்தும் பணிக்காக ஸ்ரீநகர் – கார்கில் சாலையில் நாளை மற்றும் அதன் மறுநாள் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post கார்கிலின் ஜொஜிலா பகுதியில் அடுத்தடுத்து பனிச்சரிவு: ஸ்ரீநகர் – கார்கில் சாலையில் போக்குவரத்துக்கு தற்காலிக தடை appeared first on Dinakaran.
