9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 74 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் 6,228 போலீசார் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. அக்.6, 9-ல் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை,தென்காசி மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சியின் முதற்கட்ட தேர்தலில் 77.43% வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 78.47% வாக்குகளும் பதிவாகின. 140 மாவட்ட ஊராட்சி வார்டு ஊறுப்பினர், 1,381 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. 2,901 ஊராட்சி தலைவர், 22, 581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என 27,003  பதவிக்கு தேர்தல் நடந்தது. 28 மாவட்டங்களில் விடுபட்ட 789 பதவிகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகளும் வெளியாகின்றன….

The post 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: