விசிக சார்பில் அணிவகுப்பு ஊர்வலம்

தர்மபுரி, ஏப்.14: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், தர்மபுரி மாவட்ட மேலிட பார்வையாளருமான தகடூர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தர்மபுரி ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், அம்பேத்கர் 132வது பிறந்த நாளான சமத்துவ நாளில், மத்திய அரசின் போக்கை கண்டித்து, ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு ஊர்வலம், தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இருந்து, அரசு மருத்துவமனை, அம்பேத்கர் சிலை வரை இன்று (14ம்தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. பின்னர் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கருத்தியலை உள்ளடக்கி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்சிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post விசிக சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: