அதிகாலையிலேயே குலுங்கிய பூமி.. பீகார், மேற்கு வங்க மாநிலங்களில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக பதிவு!!

பாட்னா : ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அவ்வப்போது நில அதிர்வுகள் வந்த வண்னம் உள்ளன. இந்த நிலையில் இன்று அதிகாலை பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அம்மாநில மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பீகார் மாநிலம் அரரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.35 மணிக்கு அராரியா பகுதியில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை மக்கள் லேசாக உணர்ந்நததாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 என்ற அளவில் பதிவாகி உள்ளதாகவும் தேசிய நிலஅதிர்வு மையமும் உறுதி செய்துள்ளது. இதே போல மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது சிலிகுரியில் இருந்து தென்மேற்கு பகுதியில் 140 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 5.35 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.பீகார், மேற்கு வங்காளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு உயிர் பலியோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை.

The post அதிகாலையிலேயே குலுங்கிய பூமி.. பீகார், மேற்கு வங்க மாநிலங்களில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: