வெம்பக்கோட்டை பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

ஏழாயிரம்பண்ணை, ஏப். 12: வெம்பக்கோட்டை யூனியன் கங்கரக்கோட்டை ஊராட்சி கீழச் செல்லையாபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.6.65 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் தளத்தையும், கீழசெல்லையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வரும் மதிய உணவு கூட கட்டிடத்தையும், மேட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ரூ.1.29 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 2 வகுப்பறை கட்டிட பராமரிப்பு பணிகளையும் ரூ. 44 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் சமையலறை பராமரிப்பு பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் தண்டபாணி, சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post வெம்பக்கோட்டை பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: