மன்னார்குடி அருகே ஆவின்பால் குளிரூட்டும் நிலைய சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கலாம்: லாரி உரிமையாளர்கள், ஆர்டிஓ சமாதான கூட்டத்தில் முடிவு

மன்னார்குடி, ஏப். 12: மன்னார்குடி – கும்பகோணம் சாலையில் தெப்பக்குளம் அருகில் தஞ்சாவூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக சுமார் 3.09 ஏக்கர் பரப்பளவில் இடம் உள்ளது. இதில் செயல்பட்டு வந்த பால் குளிரூட் டும் நிலையம் பல ஆண்டுகளுக்கு முன்பு தனது செயல்பாட்டை நிறுத்தி கொண் டது. மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்த நகரத் தில் போதிய இடம் இல்லாத காரணத் தால் வாழ்வாதாரம் கருதி இந்த இடத்தில் தற்காலிகமாக தங்களது லாரி களை நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர், மாநில திட்டக்குழு உறுப்பினர் டிஆர்பி ராஜா எம்எல்ஏ பரிந்துரையின் பேரில், பால் வளத்துறை அமைச்சர் லாசர் உத்தரவின் பேரில் ஆவின் சார்பில் பால் குளிரூட்டும் நிலையத்துக்கு ரூ.39 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டவும், நிலையத்தை சுற்றி ரூ.19 லட்சத்தில் சுற்றுச் சுவர் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் நடந்து வருகிறது.

சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளுக்காக அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள லாரிகளை அப்புறப்படுத்தி தருமாறு ஆவின் நிறுவனம் கூறியதை அடுத்து, சமாதான கூட்டம் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத் தில் ஆர்டிஓ கீர்த்தனா மணி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் ஆவின் பொது மேலாளர் டாக்டர் ராஜசேகர் ஹரி ஷெட்டி, ஆவின் மேலாளர் (கொள்முதல்) டாக்டர் மாதவ குமரன், வட்டாச்சியர் ஜீவா னந்தம், ஆர்டிஓ நேர்முக உதவியாளர் கார்த்திக், மன்னை வட்ட லாரி உரி மையாளர்கள் சங்க தலைவர் அனையா விளக்கு அய்யப்பன், செயலாளர் ராஜா, ஆலோசகர் ஆர்வி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். பின்னர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வருவாய் கோட்டாட் சியர் கீர்த்தனா மணி கூறுகையில், சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளுக்கு லாரி உரிமையாளர்கள் எந்தவித இடையூறும் ஏற்படுத்த மாட்டார்கள். லாரிகளை நிறுத்தி வைப்பதற்காக உரிமையாளர்களால் வாங்கப்பட்டுள்ள இடத்துக்கு லாரிகள் செல்ல ஏதுவாக சுமார் 1 கிமீ தூரத்திற்கு 10 நாட்களுக்குள் சாலை அமைத்து கொடுத்த பிறகு லாரிகளை அப்புறப்படுத்தி கட்டுமான பணிகளை துவங்கலாம் என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

The post மன்னார்குடி அருகே ஆவின்பால் குளிரூட்டும் நிலைய சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கலாம்: லாரி உரிமையாளர்கள், ஆர்டிஓ சமாதான கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: