சுற்றுலா பயணிகளை கவரும் ஊசிமலை காட்சி முனை

கூடலூர்:  நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கூடலூர் அருகே உள்ள ஊசி மலை காட்சிமுனை பெரிதும் கவர்ந்து வருகிறது. கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 26வது மைல் பகுதியில் ஊசி மலை காட்சி முனை உள்ளது.  இந்த காட்சி முனையில் இருந்து முதுமலை, கூடலூர் பள்ளத்தாக்கு காட்சிகளையும் தவலை மலை காட்சியையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முயும். கூடலூர் வழியாக ஊட்டிக்கு வரும் கேரள கர்நாடக சுற்றுலாப் பயணிகள் பிரதான சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள இந்த காட்சி முனைக்கு நடந்து சென்று இயற்கை அழகை ரசிக்க முயும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த காட்சி முனை வனத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

 
Advertising
Advertising

கடந்த 2013ம் ஆண்டு முதல் சூழல் சுற்றுலா மேம்பாட்டு குழு மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம் முதல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த காட்சிமுனைக்கு சென்றுள்ளனர். வருடத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த காட்சி முனையை பார்வையிடுகின்றனர். இங்கு இரவு நேரத்தில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து தர முடியாத நிலை உள்ளதாகவும் இங்குள்ள டிக்கெட் கவுண்டர் மற்றும் இரும்பு தடுப்புகளை அடிக்கடி யானைகள் உடைத்து சேதப்படுத்தி விடுவதாகவும் வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சூழல் பாதுகாப்பு குழு அமைக்கப்படுவதற்கு முன் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சமூக விரோதிகளால் இருந்த அச்சுறுத்தல்கள் தற்போது இல்லை என்பதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: