திருவாரூர் மாவட்ட புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் அறிவிப்பு எம்எல்ஏ, பொதுமக்கள் வரவேற்பு

மன்னார்குடி: மன்னார்குடியில், தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர், மாநில திட்டக்குழு உறுப்பினர் டிஆர்பி ராஜா எம்எல்ஏ கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப் பட்டு, அதில் 28 ஆயிரம் லிட்டர் உள்மாவட்டத்திலேயே விற்பனை செய்யப்படுகிறது. திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதில் 23 ஆயிரம் லிட்டர் இம்மாவட்டங்களிலேயே விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தற்போதைய தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை தலைமையிட மாக கொண்டு இரண்டு மாவட்ட ஒன்றியங்களாக பிரிக்க வேண்டும். என்பதை ஏற்கன வே பால்வளத்துறை அமைச்சர் நாசரிடம்,நேரிடையாகவும், கடிதம் வாயி லாகவும் வலியுறுத்தியிருந்ததோடு, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வியாகவும் கேட்டிருந்தேன். அதன் பயனாக, சட்டப்பேரவையின் பால்வளத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில் தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றி யத்தை இரண்டாக பிரித்து தஞ்சாவூர் மற்றும் திருவாரூரை தலைமையிடமாக கொண்ட இரண்டு ஒன்றியங்களாக அறிவிப்பு வெளியிடப் பட்டுள் ளது. இந்த அறிவிப்பு, திருவாரூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கும், கூட்டு றவு சங்கத்தினருக்கும், நுகர்வோருக்கும் மிகுந்த பலனை கொண்டு வரும் என மகிழ்ச்சி தெரிவித்ததொடு தமிழ்நாடு முதலமைச்சர், பால்வளத் துறை அமைச்சர் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

The post திருவாரூர் மாவட்ட புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் அறிவிப்பு எம்எல்ஏ, பொதுமக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: