கோடை வெப்பத்தால் கருகும் மாம்பூக்கள்

மதுரை, ஏப்.10: வெப்பத்தால் மாம்பூக்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கோடை வெப்பத்தால் மாம்பூக்கள் பிஞ்சாக உருமாறாமல் கருகி வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் சாப்டூர், பழையூர், வண்டாரி, பேரையூர் ஆகிய பகுதிகளில் உள்ள மாமரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது மழை பெய்தால் மட்டுமே இந்த பூக்களில் ஈரம் பட்டு அனைத்தும் பிஞ்சுகளாக மாறும். ஆனால் கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்கள் முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெப்பத்தின் தாக்கத்தால் பூக்கள் கருகி உதிர்ந்து வருகின்றன.

எனவே மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருகின்றனர். இங்கு மகசூல் தரும் பயிராக உள்ள மாங்காய்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், மரங்களுக்கு எவ்வளவு தான் தண்ணீர் பாய்ச்சினாலும் மழை பெய்தால் மட்டுமே பூக்கள் உதிராமல் இருக்கும். அதேபோல் பூத்த பூக்களும் மழை பெய்தால் தான் காய்களாக உருமாறும். இதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் வெயிலும், மழையும் வேண்டும். அது சரியாக இருந்தால் மட்டுமே முழுமையாக மகசூல் பெறமுடியும். இல்லாவிட்டால் தற்போது கோடையில் உதிரும் பூக்களால் முழுமையாக இழப்பு ஏற்படும். இவ்வாறு கூறினர்.

The post கோடை வெப்பத்தால் கருகும் மாம்பூக்கள் appeared first on Dinakaran.

Related Stories: