சுட்டெரிக்கும் வெயிலால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது

தென்காசி:  குற்றாலத்தில் சுட்டெரித்து வரும் வெயிலால் மெயினருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. புலியருவி வறண்டது. இந்திய பெருங்கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து மெயினருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் கொட்டியது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிப்பதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

மெயினருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் ஓரமாக தண்ணீர் விழுகிறது. பெண்கள் பகுதியில் தண்ணிர் விழவில்லை. இதனால் ஆண்கள் பகுதியிலேயே சிறிது நேரம் ஆண்களும், பெண்களும் மாறி மாறி தலையை நனைக்கின்றனர். ஐந்தருவியில் இரண்டு பிரிவுகளில் குறைவாக தண்ணீர் விழுகிறது. புலியருவில் தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படுகிறது. பழைய குற்றாலத்தில் குறைவாக விழுகிறது. விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மிதமாக இருந்தது.

Related Stories: