இஸ்ரேலில் நீத்துறை அதிகாரத்தை பறிக்கும் புதிய சட்டதிருத்தத்தை கண்டித்து பிரதமர் நெதன்யாகு-வுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

ஜெருசலேம்: இஸ்ரேலில் நீத்துறை அதிகாரத்தை பறிக்கும் புதிய சட்டதிருத்தத்தை கண்டித்தும், மக்கள் மீது அடுத்ததடுத்து நடக்கும் தாக்குதல்களை கண்டித்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டின் உச்சநீதிமன்றத்தை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வர முனைப்பு காட்டி வருகிறார். நெதன்யாகு நீதித்துறை அதிகாரத்தை பறிக்க முயற்சிப்பதாக கூறி இஸ்ரேலில் பல கட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக டெல் அவிவ் பகுதியில் மிக பெரியளவில் மீண்டும் போராட்டம் வெடித்தது. மேலும் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என போராட்டகாரர்கள் குற்றம் சாட்டினார். சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியை முன்வைத்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் மோதல் வெடித்ததற்கு நெதன்யாகுவே காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினார்.

மேற்கு கரையில் 2 இஸ்ரேலிய சகோதரிகள் சுட்டுக்கொல்லப்பட்டது, டெல் அவிவ் நகரில் இத்தாலி பயணி கார் ஏற்றுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் இஸ்லாமியர்களை போலீசார் துன்புறுத்துவது உள்ளிட்டவற்றால் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர். இவற்றை கண்டித்து முழக்கம் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

இஸ்ரேலில் நிலவிவரும் பரபரப்பான சூழலுக்கு இடையே நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். நெதன்யாகு போரை ஊக்குவிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றனர்.

The post இஸ்ரேலில் நீத்துறை அதிகாரத்தை பறிக்கும் புதிய சட்டதிருத்தத்தை கண்டித்து பிரதமர் நெதன்யாகு-வுக்கு எதிராக மாபெரும் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: