திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடலூர், ஏப். 9: கடலூர் மாநகராட்சி 45வது வார்டு பகுதிகளில் தி.மு.க.வில் புதிதாக உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் 250 தி.மு.க மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. கடலூர் ஐயப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வார்டு நிர்வாகிகள் மற்றும் திமுக பிரமுகர்களிடம் வழங்கி பணியினை துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகர், வழக்கறிஞர் அணி சிவராஜ், இளைஞர் அணி சுந்தர், ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், கீதா குணசேகரன், சுமதி ரங்கநாதன், பாரூக் அலி, கர்ணன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், மகேஸ்வரி விஜயகுமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், கே.ஜி.எஸ்.தினகரன், முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் இளங்கோவன், வனிதா சேகர், வார்டு அவைத்தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், சதீஷ், தங்கராசு, உமா சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பண்ருட்டி: பண்ருட்டி நகரமன்ற தலைவர் ராஜேந்திரன் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து வார்டுகளையும் நேரடியாக ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார். கட்சி பாகுபாடின்றி அனைத்து கவுன்சிலர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைக்கின்றார். சுகாதாரம், குடிநீர், கழிவுநீர் வாய்க்கால் போன்ற பிரச்னைகளை முன் நிறுத்தி ஆணையாளர் மகேஸ்வரி நகராட்சி பணியாளர்களுடன் கலந்து ஆலோசித்து பணிகளை செய்து வருகிறார். தொடர்ந்து தமிழக முதல்வரின் அறிவுரையின்பேரில் காலை, மாலை, இரவு ஆகிய நேரங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியினை செய்து வருகிறார். நேற்று 27வது வார்டு பகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியில் தீவிரமாக வெயிலை பொருட்படுத்தாமல் ஈடுபட்டார்.

அப்போது மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி செல்வம், பொருளாளர் ராமலிங்கம், அவை தலைவர் ராஜா, வழக்கறிஞர் பரணி சந்தர், இளைஞரணி சம்பத், துணை அமைப்பாளர்கள் பாலசந்தர், மதியழகன், ராஜா, பார்த்திபன், வார்டு செயலாளர் வேணுகோபால், செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய திமுக கட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம் நேற்று நடந்தது. அண்ணா கிராமம் திமுக ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். பல்வேறு பகுதிகளில் இருந்து புதிய உறுப்பினர்கள் அதிக அளவில் தீவிரமாக சேர்க்கும் பணி நடந்து வருகிறது. இதில் அவை தலைவர் சங்கர், விவசாய தொழிலாளர் அணி எழில்செல்வன், பாலாஜி, ஜெயமூர்த்தி, பொருளாளர் ஸ்ரீதர், பொதுபஙகுழு உறுப்பினர் பலராமன், மாவட்ட பிரதிநிதி பைத்தாம்பாடி ராமு, துணை செயலாளர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப அணி ஞானவேல், கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: