ஜேபி நட்டாவின் வீட்டில் நேற்றிரவு ஆலோசனை; கர்நாடகா தேர்தலுக்கு பாஜக வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் கிண்டல்

புதுடெல்லி: கர்நாடகா பாஜக வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நீடிக்கும் நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சியின் பொது ெபாதுச் செயலாளர் கிண்டல் ெதரிவித்துள்ளார். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் மே 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு மே 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். அதானி குழு சர்ச்சை மற்றும் ராகுலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து ஆகிய விவகாரங்களுக்கு மத்தியில், பாஜகவும் காங்கிரசும் கர்நாடகா தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன.

காங்கிரஸ் கட்சி இதுவரை 166 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால் பாஜக தரப்பில் இதுவரை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘முதல்வர் பசவராஜ் பொம்மை தனது தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை. அவர்களின் அமைச்சர்களும் தங்கள் தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. வேட்பாளர்களை அக்கட்சி தேடி வருகிறது’ என்றார். இந்நிலையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வீட்டில் நேற்றிரவு கர்நாடகா வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மூத்த தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வேட்பாளர்கள் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. மற்றொரு கூட்டத்தை நடத்திய பின்னர் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஜேபி நட்டாவின் வீட்டில் நேற்றிரவு ஆலோசனை; கர்நாடகா தேர்தலுக்கு பாஜக வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: