மக்களவை தேர்தலுக்கு பின் அதிகார மாற்றம்: சஞ்சய் ராவத் எம்பி பேட்டி

அகமதுநகர்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த,எம்பி.யான சஞ்சய் ராவத்,நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ 2024 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பின் நாட்டில் அதிகார மாற்றம் ஏற்படும். மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். 2024 க்குப் பிறகு அதிகார மாற்றம் நிச்சயம் இருக்கும். இதை நான் மிகவும் நம்பிக்கையுடன் சொல்வேன்.இந்து- முஸ்லிம் கலவரங்களைத் தூண்டிவிட்டு, தேர்தல் ஆதாயங்களுக்காக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலையை உருவாக்குவது தான் பாஜ.வின் உண்மையான சக்தியாக இருக்கிறது. சீனாவின் ஊடுருவல்கள் இருந்தபோதிலும், ஒன்றிய அரசு ஏன் மவுனமாக உள்ளது? பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சீனா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாஜவின் இந்துத்வா கொள்கைகள் திருடப்பட்டவை மற்றும் போலியானது’’ என்றார்.

The post மக்களவை தேர்தலுக்கு பின் அதிகார மாற்றம்: சஞ்சய் ராவத் எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: