மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதான சிக்னல்கள்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒளிரும் சிக்னல் விளக்குகள் பழுதாகியுள்ளன. இதனால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், விரைவில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் படாளம், மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல இடங்களில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில், படாளம் கூட்டு சாலை, மேலவலம்பேட்டை, கருங்குழி, மதுராந்தகம் அய்யனார் கோவில், பாக்கம், மேல்மருவத்தூர், ஊனமலை, சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஒளிரும் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை பகல் – இரவு நேரங்களில் தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும். இதன் காரணமாக அந்தந்த பகுதிகளில் வரும் வாகனங்கள் வேகத்தை குறைத்து மெதுவாக செல்லும். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையை குறுக்காக கடக்கும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க முடியும்.

ஆனால், தற்போது இந்த ஒளிரும் சிக்னல் விளக்குகளில் பெரும்பாலானவை பழுதடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. எனவே, கண்ட பகுதிகளில் கம்பங்களில் அமைக்கப்பட்டிருந்த ஒளிரும் சிக்னல் விளக்குகளை நெடுஞ்சாலை துறையினர் சரி செய்து விபத்துக்கள் இல்லாத போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

The post மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதான சிக்னல்கள்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: