நீட் பயிற்சி பெற்ற மாணவி தற்கொலை

வடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 9 பகுதியை சேர்ந்தவர் உத்திராபதி (50). நெய்வேலி என்.எல்.சி. நிறுவன ஒப்பந்த தொழிலாளி. இவரது மகள் நிஷா(18). கடந்த ஆண்டு நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு, இந்திரா நகரில் உள்ள தனியார் நீட் கோச்சிங் சென்டரில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில், வடலூர் ரயில்வே கேட் பகுதியில் வந்தபோது நிஷா திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post நீட் பயிற்சி பெற்ற மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: