திருப்பதி மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 20 பேர் கைது-22 கிலோ பறிமுதல்

ஸ்ரீகாளஹஸ்தி : திருப்பதி மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.திருப்பதி மாவட்டத்தில் கஞ்சா அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி நகரின் புறநகர் பகுதியில் உள்ள புச்சிநாயுடு கண்டிகைக்குச் செல்லும் சாலையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது ராமச்சந்திரா மிஷன் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நாகேந்திரன்(40) என்பவரை மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணையில் நாகேந்திரன் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து திருப்பதி மாவட்டத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், நாகேந்திரனை கைது செய்து அவரிடமிருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து திருப்பதி எஸ்பி பரமேஸ்வர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருப்பதி மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நாகேந்திரன் என்பவரை நேற்று போலீசார் கைது செய்து, 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் நாகேந்திரன் அளித்த தகவலின் பேரில் திருப்பதி மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள வி.எம் பள்ளியை சேர்ந்த வேணுகோபால்(43), கார்த்திக்(25), செங்கம்மா(42), பூதலப் பட்டு மண்டலம் பன்டப்பள்ளியை சேர்ந்த பாஸ்கர்(50), திருப்பதி அடுத்துள்ள அவிலால ராமர் கோயில் தெருவை சேர்ந்த இமாம்(65), பி.டி.ஆர் காலனியை சேர்ந்த ஹரி(24), திருமலை பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த எஸ்வந்த்(23), திருப்பதி ஜீவ கோனாவை சேர்ந்த சாய் பிரதாப்(20), ஜெகதீஷ்(32), சென்னையை சேர்ந்த திருப்பதி வினைக்குமார்(18), குண சரவணன்(18), வெங்கடகிரி என்டிஆர் காலனியை சேர்ந்த ராஜம்மா(60), ரேணிகுண்டா மண்டலம் கரகம்பாடியை சேர்ந்த ஷேக் பாபு(57), திருச்சானூரைச் சேர்ந்த சுமன்(40), ரோஸி(40), திருப்பதியில் தாத்தய்யகுண்டா பகுதியை சேர்ந்த கவுதம்(26), கிரி(20), மங்களம் பகுதியை சேர்ந்த திலீப் குமார்(32), யுவராஜ்(26) ஆகிய 19 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், 8 பேர் மீது ப்பீடி சட்டம் போடப்பட்டுள்ளது.

மேலும், திருப்பதி மாவட்டத்தில் கஞ்சாவை ஒழிக்க சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளோம். மேலும், குறிப்பாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்த தகவலை வழங்க 14500 என்ற எண் அல்லது டயல் 100க்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்களை ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post திருப்பதி மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 20 பேர் கைது-22 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: