காரமடை எஸ்விஜிவி பள்ளியில் விளையாட்டு விழா

மேட்டுப்பாளையம்:  மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் எஸ்விஜிவி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா கடந்த சில தினங்களாக பள்ளி வளாகத்தில்  நடைபெற்று வந்தது. போட்டிகள் கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், எறிபந்து, இறகுப்பந்து, அத்லெட்டிக், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் என பல்வேறு பிரிவுகளின்  கீழ் மாணவர்கள் இடையே நடைபெற்று வந்தன.  வ்விழாவின் நிறைவாக  நேற்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய விமானப்படை முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் எம்.ஜி.கிரீஷ் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் பள்ளியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் 58 புள்ளிகளை பெற்று எல்லோ மேரி கோல்ட் அணியும், பெண்கள் பிரிவில் 49 புள்ளிகளை பெற்று எல்லோ மேரி கோல்ட் அணியும் தட்டிச்சென்றன. பரிசளிப்பு விழாவில் பள்ளியின் முதல்வர் சசிகலா, செயலாளர் ராஜேந்திரன்,நிர்வாக அலுவலர் சிவசதீஷ்குமார், அறங்காவலர் தாரகேஸ்வரி உள்ளிட்ட பள்ளியின் நிர்வாகிகள் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: