சிறுமுகை ஸ்ரீஅம்பாள் பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

மேட்டுப்பாளையம்:  ஆறுக்குட்டிக்கவுண்டர் நினைவு அறக்கட்டளையின் சார்பில் சிறுமுகையில் ஸ்ரீ அம்பாள் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் எதிர்காலத்தில் பெறப்போகும் பட்டங்களுக்கு ஆதாரமாக குழந்தைகளிடம் மறைந்துள்ள தனித்திறன்களை வெளிக்கொண்டு வந்து ஊக்குவிக்கும் வகையில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நேற்று பள்ளி வளாகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை பள்ளி தாளாளர் அம்பாள் பழனிச்சாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பள்ளி செயலாளர் கீதா, முதல்வர் சித்ரா ஜெயந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  ழலையர் வகுப்பில் பயிலும் மாணவர்கள் இயாத் மற்றும் ஹம்சத் உள்ளிட்டோர் 28 மாநிலங்களின் பெயர்களையும், அவற்றின் தலைநகரங்களையும்  கூறினர். மாணவர் சதன் சந்துருதன் 118 தனிம வரிசை அட்டவணையை கூறி பார்வையாளர்களை வியப்புக்கு உள்ளாக்கினார். இவர் இதற்கு முன்னர் தேசிய அளவில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனையை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் கார்த்தியாயனி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். அப்போது, அவர் பேசுகையில், ‘‘தமிழ் வழியில் படித்து மருத்துவராக சமூகத்தில் தான் உயர்ந்து விளங்குவதையும், ஒழுக்கத்தை கடைப்பிடித்து நடந்தால் வாழ்வில் முன்னேறலாம் என்பதையும் எடுத்து கூறினார். இவ்விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: