×

சேலம் ஜவுளி பூங்காவில் 55 ஆயிரம் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு

* இன்னும் 2 ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும்
* பூங்கா தலைவர் ஏ.எல். அழகரசன் பேட்டி
சேலம், மார்ச். 21: சேலத்தில் ₹880 கோடி செலவில் அமையும் ஜவுளி பூங்காவால் 55 ஆயிரம் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என பூங்காவின் தலைவர் அழகரசன் கூறினார். சேலம் அமைய இருக்கும் ஜவுளி பூங்காவின் தலைவர் ஏ.எல். அழகரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக சேலத்தில் ஜவுளி பூங்காவை கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். சமீபத்தில் சேலம் வந்த தமிழ்நாடு முதல்வர் சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என கூறினார். இதனால் ஜவுளி ெதாழில் சார்ந்துள்ள அனைவரும் பெருமகிழ்ச்சியடைந்தோம். தற்போது பட்ெஜட்டில் சேலத்தில் ₹880 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜவுளி பூங்கா சேலம் ஜாகீர்அம்மாப்பாளையத்தில் அமையவுள்ளது. அருகில் விமானநிலையம் இருப்பதால் வெளி நாடுகளில் இருந்து ஜவுளி தொழிலதிபர்கள் வருவதற்கு வாய்ப்பாக அமையும். இந்த ஜவுளி பூங்காவில் 100 யூனிட் அமையவுள்ளது. இதன் மூலம் 15 ஆயிரம் பேர் நேரடியாக பயன்பெறுவார்கள். இதன் உபதொழில்கள் மூலமாக 40ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஜவுளி தொழிலின் தாயகமாக இருந்த ஜவுளி தொழில் நசிவடைந்து, திருப்பூர் பக்கம் சென்றுவிட்டது. தற்போது அமையவுள்ள ஜவுளி பூங்காவின் மூலம் சேலம் மீண்டும் புத்துயிர் பெறும்.

இந்த ஜவுளி பூங்காவில் சேலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும். இந்த ஜவுளி பூங்காவை ஒரு கிரீன் யூனிட் என்றே சொல்லவேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடாது. இதற்கு தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் செலவாகிறது என்றால் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்தப்படும். 20 லட்சம் லிட்டர் தண்ணீர் ஆவியாகிவிடும். இதற்கான தண்ணீரை திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக்கப்படும். இதற்காக திருமணி முத்தாற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்தப்படும்.

இன்னும் 2 ஆண்டில் இந்த ஜவுளிபூங்கா பயன்பாட்டிற்கு வந்துவிடும், ஆண்டுக்கு ₹6 ஆயிரம் கோடி ஜவுளி விற்பனை செய்யப்படும். இதன்மூலம் 300  கோடி ரூபாய் அரசுக்கு ஜிஎஸ்.டி மூலம் கிடைக்கும். சேலம் மக்களின் கோரிக்கையை ஏற்று ₹880 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய  தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறுஅவர் கூறினார்.பேட்டியின்போது பூங்காவின் எம்.டி. தர்மலிங்கம், இயக்குனர் சசிகுமார், கவுன்சிலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Salem Textile Park ,
× RELATED 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு...