ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில் 4 மாநில பழங்குடி மாணவர்களுக்கு கொண்டனூரில் சிறப்பு முகாம்

கோவை, மார்ச் 20: ஒன்றிய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு நேரு யுவகேந்திரா சங்கதன் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில்,  ‘பழங்குடியின இளைஞர் பரிமாற்ற சிறப்பு முகாம்’,  கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்  மார்ச் 14-ம் தேதி தொடங்கி, மார்ச் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் பீஹார், சத்திஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் 220 பங்கேற்றுள்ளனர்.

இம்முகாமின் ஒரு பகுதியாக, பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். அண்ணாதுரை ஆலோசனையின்பேரில், 4 மாநில பழங்குடியின மாணவர்கள் கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்தெடுத்து பல்வேறு சேவைகளை செய்து வரும், கொண்டனூர் பழங்குடியின கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு நாள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், பழங்குடியின மாணவர்களுக்கு வரவேற்பு அளித்தார். அங்கு வாழும் மக்களின் பண்பாடு, கலாசாரம், பழக்க வழக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் எஸ்.பிரகதீஸ்வரன், ஆர்.நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: