தொண்டாமுத்தூர், மார்ச் 20: கோவை வடவள்ளியில் இருந்து காளப்பநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் ஈசா பூண்டி, கோவை குற்றாலம், மருதமலைக்கு வரும் வாகனங்கள் மேட்டுப்பாளையம், ஊட்டி, மைசூர் போன்ற ஊர்களுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றிய அரசு நிதி உதவி ரூ.1 கோடியே 92 லட்சம் மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ரோடுகள் சிறு பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
