விருத்தாசலம் அரசு கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா

விருத்தாசலம், மார்ச் 18: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் முதுநிலை ஆராய்ச்சி மற்றும் விலங்கியல் துறை, விலங்கியல் மன்றம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் ரங்கோலி கோல போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். விலங்கியல் துறை தலைவர் செந்தில்குமார், பேராசிரியர் முத்தழகி முன்னிலை வகித்தனர். முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர் சிவந்தராசு வரவேற்றார். இதில் கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறந்த உணவுகளை தயாரித்த மாணவர்கள் மற்றும் ரங்கோலி கோலப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். விலங்கியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி பிரித்தா நன்றி கூறினார்.

Related Stories: