காரத்தொழுவு கிராமத்தில் இடுபொருள் அலுவலகம் திறப்பு

உடுமலை: திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டாரத்தில் ஏர் உழவன் கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். விவசாயிகளின் நலனுக்காக காரத்தொழுவு கிராமத்தில் இடுபொருள் அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் நிறுவனத்தின் தலைவர்கள், வேளாண் அதிகாரி வேளாண் உதவி இயக்குனர், துணை வேளாண் அதிகாரி, விவசாயிகள், முக்கிய அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை. மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லி. விதைகள் மற்றும் நுண்ணுயிர் உரங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு தீர்வுகளை அளித்தனர். பின்னர் உடுமலை வட்டார வேளாண் அலுவலகத்திற்கும், பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கும் சென்றனர். வேளாண் உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் மூலம் நடப்பாண்டில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும், உடுமலையில் காணக்கூடிய பயிர்களின் மேலாண்மை பற்றிக் கூறினர். வேளாண் இயந்திரங்கள் குறித்தும் அதன் பயன்பாடு மற்றும் முக்கியத்துவத்தையும் அறிந்தனர்.

Related Stories: