பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி

கோவை:  கோவை டைஸ் சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டி கோவை சிஐடி கல்லூரி, அரசூர் கேபிஆர் கல்லூரி மற்றும் வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மைதானங்களில் நடக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியில் கேஐடி தொழில்நுட்ப கல்லூரி அணியுடன் பிபிஜி தொழில்நுட்ப கல்லூரி மோதின. கேகேஐடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. இந்த அணி சார்பாக விளையாடிய ஆனந்த் பாண்டியன் 87 ரன்களும், பிரபா 42 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து விளையாடிய பிபிஜி அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்தது.  

156 ரன்கள் வித்தியாசத்தில் கலைஞர் கருணாநிதி அணி வெற்றி பெற்றது.  கே.பி.ஆர்  கல்லுாரியில் நடந்த மற்றொரு போட்டியில் கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணியுடன் ஸ்ரீ சக்தி கல்லூரி அணி மோதியது. இதில் ஸ்ரீ சக்தி கல்லூரி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. இந்த அணி சார்பாக விளையாடிய ராகுல் 37 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய ஸ்ரீ கிருஷ்ணா அணி 19 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணி சார்பாக விளையாடிய மவுலி 32 ரன்களும், கவின் குமார் 33 ரன்களும் எடுத்தனர். கிஷோர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆண், பெண் மரம்கள் இறக்கும்போது சிலர் அது எந்த மரத்துக் கள் என்று கேட்பார்கள். ஆண் மரமா? பெண் மரமா? என கேட்பார்கள். ஆண் மரக் கள் அதிக வீரியம் உள்ளதாகவும், பெண் மரக் கள் சற்று வீரியம் குறைவாக உள்ளதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். மேலும 41 நாட்கள் தொடர்ந்து ஆண்மரத்தின் கள்ளை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என சிலர் தெரிவிக்கின்றனர். இதனால் சிலர் ஆண் மரக் கள் மட்டுமே வேண்டும் என கேட்டு வாங்கி பருகி வருகின்றனர்.

Related Stories: