ஆன்லைன் ரம்மியால் தற்கொலைகள் அதிகரிப்பு தமிழ்நாடு ஆளுநருக்கு இன்று சாம்பல் அனுப்பும் போராட்டம்

கோவை:  தந்தை பெரியார் திராவிடர் கழக (தபெதிக) பொதுச்செயலாளர்  கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆன்லைன்  ரம்மி சூதாட்ட விளையாட்டை தடைசெய்யும் நோக்குடன் தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல  மாதங்களாக ஒப்புதல் அளிக்காமல், அந்த மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி  அனுப்பி வைத்திருக்கிறார். தடை சட்டம் நிறைவேறாததால் ஒவ்வொரு நாளும்  ஆன்லைன் விளையாட்டில் ஏமாந்த தமிழ் மக்கள் தற்கொலை செய்து வருகிறார்கள்.  இதுவரை 42 பேர் ஆன்லைன் ரம்மி விளையாடி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு மக்களின் உயிரை காவு வாங்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடைசெய்யும் மசோதாவுக்கு அனுமதி வழங்காமல், ஆன்லைன் சூதாட்ட முதலாளிகளுடன்  ஆளுநர் ஆலோசனை நடத்திவருகிறார்.  தமிழ்நாடு மக்களின் உயிரைப்பற்றி  கவலைப்படாத தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ஆன்லைன் விளையாட்டால் உயிரிழந்த  தமிழர்களின் சாம்பல்களை, தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் போராட்டம் இன்று (வியாழன்) காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட  தலைநகரங்களில் நடக்கிறது. அந்தந்த மாவட்ட தலைமை தபால் நிலையங்கள் மூலம்  ஆளுநருக்கு சாம்பல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

உடலுக்கு நல்லது என புதுவிதமான விளக்கம் கலப்படம் அதிகம் பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளில் சர்க்கரை மற்றும் பூசணிக்காய் கலந்து விற்கப்படுவதாகவும், இதனால் கள்ளின் சுவை மாறுபட்டு சிறிது போதை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் மிகவும் மலிவாக கிடைக்கும் சில மாத்திரைகளை சிலர் கள்ளில் கலந்து விற்பனை செய்து வருவதாகவும், இதனால் கலப்படம் செய்யப்பட்ட கள்ளை குடிப்பதால் உடல் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் ஏற்படும் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். சீசனில் மட்டுமே கிடைக்கும் கள் என்பது அனைத்து நாட்களிலும் கிடைக்கும் பானம் கிடையாது. குறிப்பிட்ட சீசனில் மட்டுமே அது கிடைக்கிறது. குறிப்பாக பிப்ரவரி மாதம் முடியும் தருவாயில் அந்த சீசன் தொடங்குகிறது. அது மே மாதம் வரை செல்கிறது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் கள் நன்றாக கிடைக்கும். அதன்பிறகு அதன் சீசன் முடிவடைந்து மே மாதத்தில் இருந்து கள் இறக்குமதி படிப்படியாக குறையும். ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள தோப்புகளை பலரும் குத்தகைக்கு எடுத்து இந்த 3 மாதங்களில் மட்டும் கள் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பிட்ட குத்தகை காலம் முடிந்தபிறகு அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விடுகின்றனர்.

ஜக்கு 20 ரூபாய் ஆந்திர எல்லையில் விற்கப்படும் கள் ஒரு ஜக்கு ₹20 முதல் ₹25 வரை விற்கப்படுகிறது. இதில் ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு ₹20க்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ₹25க்கும் விற்கப்படுகிறது. அதுவே ஒரு குடமாக வாங்கினால் குடத்திற்கு ஏற்றார்போல் ₹400ல் இருந்து ₹600 வரை விற்கப்படுகிறது. தெலுங்கில் பேசினால் சற்று குறைவாகவும், தமிழில் பேசினால் சற்று அதிகமாகவும் விற்கப்படுவதாக கள் குடித்து வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: