களக்காட்டில் ரூ.11 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் ரூபிமனோகரன் எம்எல்ஏ நடவடிக்கை

களக்காடு, மார்ச் 11: களக்காட்டில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படும் இடத்தை ரூபிமனோகரன் எம்எல்ஏ பார்வையிட்டார். களக்காடு அண்ணா சிலை பஸ் நிறுத்தம் அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவும், மாநில காங்கிரஸ் பொருளாளருமான ரூபி மனோகரன் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதனைதொடர்ந்து பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ரூபி மனோகரன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், வரும் ஏப்ரல் மாதத்திற்குள் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணிகள் முடிவடையும் என்றார். அவருடன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், நகர தலைவர் ஜார்ஜ்வில்சன் மற்றும் நிர்வாகிகள் தங்கராஜ், காமராஜ், துரைராஜ், வில்சன், துரை, யோசுவா, பீர்முகம்மது, பெருமாள்ராஜ், இளைஞர் காங்கிரஸ் விபின் உள்பட பலர் சென்றனர்.

Related Stories: