மானகிரி பள்ளியில் மகளிர் தின விழா

காரைக்குடி: காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாப்பட்டது. பள்ளி முதல்வர் உஷாகுமாரி வரவேற்றார். பள்ளிக் குழும தலைவர் குமரேசன் தலைமை வகித்து பேசுகையில், ‘பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்து முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார். இன்று பல உயர் பதவிகளில் பெண்கள் இருக்கின்றனர். பெண்களின் பெருமையை போற்ற வேண்டும் என்பதற்காக இது போன்ற விழாக்கள் நடத்தி வருகிறோம். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர்கள் பெண்கள். கல்விதான் நமக்கும் மிகப் பெரிய சக்தி. கல்வியால் மட்டுமே உயர்ந்த பதவிகளையும், நாம் நினைக்கும் உயரத்துக்கு செல்ல முடியும். எடுத்துக் கொண்ட பொறுப்புகளை சிறப்பாக செய்யக் கூடியவர்கள் பெண்கள். சமூகவளர்ச்சிக்கும், குடும்ப வளர்ச்சிக்கும் பெண்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்’ என்றார். நிகழ்ச்சியில் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் விவசாயத்தில் சாதனை படைத்து வரும் பெண் விவசாயி தேவி மற்றும் சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியர் ஹேமமாலினிக்கு சாதனை பெண் விருது வழங்கப்பட்டது. பள்ளி துணை முதல்வர் பிரேமசித்ரா நன்றி கூறினார்.

Related Stories: