கடலூர், மார்ச் 5: கடலூர் தொகுதி எம்எல்ஏ ஐயப்பன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி 3வது வார்டு சார்பில் தி.மு.க. கவுன்சிலர், கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில் ஐயப்பன் எம்.எல்.ஏவுக்கு மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக ஐயப்பன் எம்.எல்.ஏ நலன் வேண்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏழை, எளியோருக்கு நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கடலூர் மூன்றாவது வார்டு ராமலிங்கம், விஜயகுமார், தெய்வநாயகம், முருகன், பாஸ்கர், அஷ்ரப் அலி, மணிகண்டன், பாலசந்தர், சதிஷ், ஆனந்த், சதாசிவம்,
