உளுந்து பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

சேத்தியாத்தோப்பு, மார்ச் 5:  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் கீழ் கொள்ளிடம் உபவடிகால் பகுதியில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் கீரப்பாளையம் ஒன்றியம் விளாகம் கிராமத்தில் உளுந்து பயிரில் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி மற்றும் டிரோன் மூலம் பயறு ஒன்டர் தெளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  

மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் தவபிரகாஷ் அறிவுறுத்தலின்படி திட்ட பொறுப்பு விஞ்ஞானி அரிசுதன், உளுந்து பயிரின் ரகங்கள் பற்றியும், களை மேலாண்மை பற்றியும், பயறு ஒன்டர் பற்றியும், டிஏபி 2 சதவீதம் கரைசல் தயாரித்து தெளிக்கும் முறை பற்றியும் எடுத்துரைத்தார். இணை பேராசிரியர் இந்திராகாந்தி, உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் பற்றியும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.

Related Stories: