ஆதனக்கோட்டையில் சிறுதானிய பயன்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி

கந்தர்வகோட்டை, மார்ச் 2: கந்தர்வகோட்டையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிறுதானியங்களின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை ஊராட்சியில் புஷ்கரம் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் வள்ளியம்மை, புஷ்யமி சினேகா, யுவர்திகா, யுவ, அகஸ்தியா, தேவதர்ஷினி, இந்துமதி, கவிபாரதி, தர்ஷினி ஆகியோர் கொண்ட குழு மாணவிகள் வேளாண் கிராம அனுபவப் பணித்திட்டத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மாணவிகள் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு ஆதனக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று சிறு தானியத்தின் முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும் கல்லூரி மாணவிகளும், பள்ளி மாணவ, மாணவிகளும் ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று கம்பு உடலுக்கு தெம்பு என்றும், ராகி இருக்க மேகி எதற்கு எனவும், தினை இதயத்திற்கு துணை, பனி வரகு புற்று நோயை விலகு போன்ற கோஷங்கள் எழுப்பியவடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவர்களுக்கு உறுதுணையாக ஆதனக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் இருந்தார்.

Related Stories: