கோவை, பிப்.27: கோவையில் நாடார் சங்கம் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. கோவை நாடார் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. இடையில், நீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக தேர்தல் நடக்கவில்லை. தற்போது வழக்கு முடிவு பெற்று மீண்டும் தேர்தல் நடக்கிறது. அதன்படி, கோவை நாடார் சங்கத்தின் 2023-2026-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. இந்த தேர்தல் டாடாபாத்தில் உள்ள நாடார் சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்தது. மொத்தம் 10 ஆயிரத்து 609 வாக்குகள் பதிவாகியுள்ளன. இரவு வாக்குகள் எண்ணப்பட்டன.
