பொள்ளாச்சி, பிப்.26: பொள்ளாச்சி அரிமா சங்கம் சார்பில் தொகுக்கப்பட்ட மருத்துவ தகவல்கள் அடங்கிய பொள்ளாச்சி மெடி டைரி புத்தக வெளியீட்டு விழா பொள்ளாச்சி அரிமா சங்க வளாகத்தில் நடைபெற்றது. பொள்ளாச்சி நகரம் சுற்றுவட்டார பகுதியில் இயங்கி வரும் அனைத்து விதமான மருத்துவர்கள், மருத்துவமனைகள், லேப்கள், மருந்தகங்கள், தனியார் நர்சிங், சேவை ரத்த வங்கிகள், ஆம்புலன்ஸ் சேவை போன்ற மருத்துவம் தொடர்பான அனைத்து சேவை மையங்களின் தகவல்கள் தொடர்பு எண்கள் அடங்கிய மருத்துவ தகவல் களஞ்சிய புத்தகமான பொள்ளாச்சி மெடிடைரியை இந்திய மருத்துவ தகவல் கழகத்தின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் மருத்துவர் பழனிச்சாமி வெளியிட அரிமா சங்க ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, இந்திய பல் மருத்துவக் கழகத்தின் செயலாளர் மருத்துவர் ராஜ்மோகன், பொள்ளாச்சி அரிமா சங்க தலைவர் நந்த கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சி அரிமா சங்க முன்னாள் தலைவர் நாகமாணிக்கம் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.