வதிலை பூசாரிபட்டியில் கலியுக சிதம்பரேஸ்வர் கோயில் திருவிழா

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஒன்றியம், மல்லனம்பட்டி ஊராட்சி, பூசாரிபட்டியை அடுத்துள்ளது கலியுக சிதம்பரேஸ்வர் கோயில். கி.மு 16ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் தமிழ்நாட்டிலேயே 2வது பெரிய நந்தி சிலை அமைந்துள்ளது.  இக்கோயிலில் மகா சிவாராத்திரி விழா 3 நாட்கள் வெகு விமரிசையாக நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக பெரிய நந்திக்கு பூசாரி சுந்தர் தலைமையில் மகா அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது தொடர்ந்து இரவு 7 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு முதல் கால பூஜை நடந்தது. அதன்பின் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல்,பு ளி சாதம், சுண்டல் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அன்று இரவு 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடந்தது. ெதாடர்ந்து பூசாரிபட்டியிலிருந்து கோயிலுக்கு சாமி பெட்டி தூக்கி வந்து நள்ளிரவில் மூன்றாம் கால பூஜை நடந்தது.

விழாவில் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் வத்தலக்குண்டு, பூசாரிபட்டி, லட்சுமிபுரம், முத்துலாபுரம் உள்பட பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோயிலில் விரைவில் நடைபெறும் கும்பாபிஷேக பணிக்காக பலர் மனமுவந்து நன்கொடை தந்தனர். விழா ஏற்பாடுகளை பெரிய பூசாரி காசி, தலைமை பூசாரி சுந்தர், திருப்பணி குழுவினர் கோடாங்கி, விருமா, பாண்டி, முருகவேல், சின்ன பூசாரி பரணிதரன், செல்லத்துரை ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: