வால்பாறை பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறை, பிப்.21: வால்பாறை பகுதியில் கடும் பனியும் கடும் வெயிலும் மாறி மாறி நிலவி காலநிலை மாற்றம் வழக்கத்திற்கு மாறாக நீடிப்பதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் பிப்ரவரி முதல் வாரம் வரை மட்டும் பனி நீடிக்கும். மேலும் 2ம் வாரம் கோடை மழை பெய்வது வழக்கம். தற்போது பனியின் தாக்கம் நீடித்து வருகிறது. அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதியில் புல்கள் மற்றும் புதர்கள் காய்ந்து வருகிறது. சாலையோரங்களில் உள்ள புற்கள் காய்ந்துவிட்டது. மேலும் வறண்ட வானிலை உள்ளதால் பசுந்தேயிலை மகசூல் குறைந்து உள்ளது. இதனால் தேயிலை தோட்ட பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பல்வேறு எஸ்டேட்களில் நிழல் மரம் கத்தரிப்பு  பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே தேயிலை விவசாயிகள் கோடை மழையை எதிர்நோக்கி உள்ளனர். மேலும் விரைவில் மழை பெய்யும் என  வால்பாறை பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Related Stories: