ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம், அக். 1: விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பலகைகள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது குறித்து சப்-கலெக்டர் பழனி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், விருத்தாசலம் தாசில்தார் தனபதி முன்னிலை வகித்தனர். விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி தாலுகாக்களை சேர்ந்த அனைத்து துறை அதிகாரிகள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.தற்காலிக டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் அமைப்பது தொடர்பாக, விதிமுறைகளை அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து அனுமதி பெற வேண்டும். சாலை மற்றும் நடைபாதை ஓரங்களில் இயல்பாக அமைப்பதை அனுமதிக்கக் கூடாது. பாதசாரிகள், வாகனங்கள் செல்லும் சாலை பகுதியில் விளம்பர பலகைகள் அமைத்தல் கூடாது. கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் உள் நோயாளி வசதியுடன் கூடிய மருத்துவமனைகள் ஆகியவற்றின் முன் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் சுவரொட்டிகள் அமைக்க அனுமதித்தல் கூடாது, உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Related Stories: