நகராட்சி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு கூட்டம்

நெல்லிக்குப்பம், அக். 1: நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். நகர மன்ற துணை தலைவர் கிரிஜா திருமாறன் முன்னிலை வகித்தார். நகராட்சி மேலாளர் பார்த்திபன் வரவேற்றார். துப்புரவு அலுவலர் சக்திவேல், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரவிச்சந்திரன், கட்டிட ஆய்வாளர் ஜின்னா, விசிக நகர செயலாளர் திருமாறன், நகர பொருளாளர் காவியன், கவுன்சிலர் பன்னீர்செல்வம், நெல்லிக்குப்பம் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் கண்ணன் மற்றும் நுகர்வோர் சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, சுப்பிரமணியன், முகுந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மெய்யழகன், நகர மக்களின் நலன் குறித்து பேசினார். நகராட்சி சார்பில் நடைபெறும் பணிகள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் பலகை வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். நுகர்வோர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என கூறி, வெளியிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: