ரூ.6.30 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருப்பூர்,செப்.30: உடுமலை அருகே ரூ.6.30 கோடி மதிப்பிலான 21.10 ஏக்கர் ஆக்கிமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். திருப்பூர் மாவட்டம்,  உடுமலை வட்டம் கொங்கல் நகரம் மாரியம்மன், விநாயகர் கோயிலுக்கு சொந்தமான புன்செய் நிலம் உள்ளூர்வாசிகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், இந்த நிலத்தை மீட்க திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஆக்கிரமிப்புதாரர்கள் தாமாகவே முன்வந்து நிலத்தை ஒப்படைத்தனர்.

இதன்படி கோயிலுக்கு சொந்தமான 21.10 ஏக்கர் புன்செய் நிலத்தை அறநிலையத்துறை துணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் சரக ஆய்வர் சுமதி, செயல் அலுவலர் அம்சவேணி மற்றும் திருக்ேகாயில் பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மீட்டனர். இந்த இடத்தின் மதிப்பு ரூ.6.30 கோடி ஆகும். இந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

Related Stories: