ஆக்கிரமிப்பு பாதையை மீட்டு தர வேண்டும்: கரிசல்பட்டி மக்கள் கலெக்டரிடம் மனு

திண்டுக்கல், செப். 30:வேடசந்தூர் கரிசல்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாதை மீட்டு தரக்கோரி கலெக்டர் விசாகனிடம் மனு அளித்தனர். அம்மனுவில், ‘வேடசந்தூர் அருகே கரிசல்பட்டியில் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இதில் 50 குடும்பங்கள் பட்டா வாங்கி அரசு தொகுப்பு வீடு கட்டி குடியிருந்து வருகின்றோம். அதில் உள்ள பாதையை நாங்கள் அனைவரும் பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த பாதையை சிலர் அடைத்து ஆக்கிரப்பு செய்துள்ளனர். இதனால் நாங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் தவிக்கின்றோம். எனவே கலெக்டர், ஆக்கிரத்தை இடத்தை மீட்டு பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.

Related Stories: