10 டன் இரும்பு பொருட்கள் கடத்திய லாரி பறிமுதல்

கடலூர், செப். 28:  கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் தொழிற்சாலை பகுதியிலிருந்து இரும்பு பொருட்களை லாரியில் கடத்தி செல்வதாக வந்த தகவலை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வாகன எடை போடும் மையத்தில் கனரக வாகனங்களை சோதனை மேற்கொண்டனர். அப்போத இரும்பு பொருட்களுடன் புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், சுமார் 10 டன் அளவிலான இரும்பு பொருட்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.விசாரணையில், இரும்பு பொருட்கள் கடலூர் அருகே உள்ள தொழிற்சாலையிலிருந்து கடத்திச் செல்வது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 டன் இரும்பு பொருட்களுடன் லாரியை பறிமுதல்  செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவர் புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாதவன் (32) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Related Stories: