யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவி மதியின் பெற்றோர் வேப்பூர் போலீசில் புகார்

வேப்பூர், செப். 28: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமலிங்கம்-செல்வி. இவர்களது மகள் மதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்2 படித்து வந்தார். இந்நிலையில் அந்த பள்ளி வளாகத்தில் மாணவி மதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவி மதியின் பெற்றோர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் யூடியூபர் கார்த்திக்பிள்ளை தனது மகள் மதி இறப்பு பற்றியும், தங்களை பற்றியும் தொடர்ந்து அவதூறாக செய்தியை பரப்பி வருகிறார். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதால் யூடியூபர் கார்த்திக்பிள்ளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறியுள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.

Related Stories: