புதூர் யூனியனில் ரூ.65 லட்சத்தில் திட்டப்பணிகள்

விளாத்திகுளம், செப். 27: புதூர் யூனியனில் ரூ.65 லட்சத்தில் கிராம மேம்பாட்டு திட்டப் பணிகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். புதூர் யூனியனுக்குட்பட்ட மேலஅருணாசலபுரம் பஞ். வன்னிப்பட்டியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, ஊரணி மேம்பாட்டு பணிகள் மற்றும் உலர்களம் அமைத்தல், பூதலாபுரம் கிராமத்தில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைத்தல், பேவர் பிளாக் சாலை மற்றும் ஊரணி மேம்பாட்டு பணிகளின் துவக்க விழா நடந்தது. விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தலைமை வகித்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதன் அவசியத்தை விளக்கினார்.

நிகழ்ச்சியில் புதூர் பிடிஓக்கள் சிவபாலன், சசிகுமார், திமுக ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்(மத்திய), செல்வராஜ்(கிழக்கு), மும்மூர்த்தி(மேற்கு), பேரூர் செயலாளர் மருதுபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், யூனியன் இன்ஜினியர்கள் தமிழ்ச்செல்வன், ரவிச்சந்திரன், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்தர்மலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் கொப்பையா, ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேசபாண்டியன், சென்னை குமார், புதூர் பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜ், விளாத்திகுளம் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் தர் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: