ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தர்மபுரி, செப்.23: தர்மபுரியில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் விதி மீறி செயல்பட்ட 2 கடைகள் அகற்றப்பட்டன. தர்மபுரி டவுன் சிவசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமாக தர்மபுரி -சேலம் பைபாஸ் சாலையில் 50க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், 3 ஆயிரம் சதுர அடியில் இருந்த இரு கடை உரிமையாளர்கள் நீண்ட நாட்களாக வாடகை நிலுவை வைத்துள்ளதோடு சட்ட விரோதமாக உள்வாடகைக்கு வேறு நபருக்கு விட்டது அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து, சேலம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி உத்தரவின்பேரில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று அறநிலையத்துறை தர்மபுரி உதவி கமிஷனர் உதயகுமார் தலைமையில் டவுன் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. இப்பணியை சிவசுப்ரமணியசுவாமி கோயில் செயல் அலுவலர் ராதாமணி, காலபைரவர் கோயில் செயல் அலுவலர் ஜீவானந்தம், செயல் அலுவலர் சின்னசாமி, ஆய்வர்கள் சங்கர்கணேஷ், தனுசூர்யா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Related Stories: