தமிழ்நாட்டில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பன்னாட்டு கருத்தரங்கம்

தஞ்சாவூர், செப். 23: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்நாட்டில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்லூரி பேராசிரியர் மீனாட்சி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சிந்தியாசெல்வி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு பேசினார். கேரளா மாநில பல்கலைக்கழக பேராசிரியர் முகமது மாகின், குந்தவை நாச்சியார் கல்லூரி வரலாறு துறை பேராசிரியர் சந்திரவதானம், இலங்கை நாட்டின் பேராசிரியர் நடேச குணாவர்த்தனா ஆகியோர் வாழ்த்தி பேசினர். கல்லூரி பேராசிரியர் மீனாட்சி எழுதிய தமிழ்நாட்டின் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய புத்தகத்தை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வெளியிட அதனை கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழக ஆய்வு மாணவ- மாணவிகள், கல்லூரி ஆய்வு மாணவ- மாணவிகள் என 150 மாணவர்களுக்கு சான்றிதழ், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. ஆய்வு மாணவர்களில் இந்தியா மட்டுமின்றி நேப்பாள், இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களும் அடங்குவர். சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ், எழுதுபொருட்கள் ஆகியவை அனைத்தும் கல்லூரி பேராசிரியர் முனைவர் மீனாட்சியின் சொந்த செலவில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: